Saturday, October 2, 2010

பாபரா ... மீர் பாஹியா

வழக்கு தள்ளுபடி ஆய்டுத்து .. எப்படி

வழக்கினை வினாக்களாக மாற்றிக் கொண்டு ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்

கொஸ்டின் ஒன்று :
அந்த கட்டடிடம் வாதிகள் மனுவில் சொல்வது போல் பாபர் கட்டியதா அல்லது பிரதிவாதிகள் சொல்வது போல் மீர் பாஹி கட்டியதா

தீர்ப்பு : பிரதிவாதிகள் சார்பாக வாதிகளுக்கு எதிராக

எப்படி என்ன காரணம்..

தொடரும்....

யாருக்கு சொந்தம்

புரிந்து கொள்ள வசதியாகவும் தொடர எளிமையாகவும் இருக்கும் காரணமாய்
வழக்கு எண் 4 வக்பு வாரியம் வெர்சஸ் கோபால் சிங் எனும்  வழக்கின் விபரங்களுடன் பயணத்தினைத் தொடங்கலாம்

1961 ல் தொடரப்பட்டு பின்னர் 1995 ல் சில மாறுதல்களை வக்பு வாரியம் தனது வேண்டுகோளில் உள்ளடக்கி தொடரப்பட்ட வழக்கின் வேண்டுகோள் இது தான் 

 443 ஆண்டுகளுக்கு முன்பு அரசர் பாபர் வழங்கிய மான்யத்தில் "அந்த"இடத்தில் மசூதி கட்டப்பட்டது . 1934 ல் நடந்த கலவரத்தில் மசூதி சேதமடைந்தது ; பின்னர் 1949 டிசம்பர் 22 நள்ளிரவில் இந்துக்கள் அந்த இடத்தில் அத்து மீறி நுழைந்து விக்கிரகங்களை வைத்து மசூதியின் புனித்ததினை குலைத்துவிட்டனர். கிரிமினல் ப்ரோசீஜர் கோட் செக்க்ஷன் 145 ன் கீழ் அந்த இடம் அரசால் அட்டாச் செய்யப்பட்டது . அந்த இடம் எங்களுக்குத்தான் சொந்தம். லிமிடேஷன் சட்டத்திற்கு அப்பாற்ப்பட்டு எங்களுக்கு அதனை மீட்டு தாருங்கள்

வக்பு வாரியத்தின் இந்தக் கோரிக்கை 30 தேதி வழங்கப்பட்ட இந்த தீர்ப்பின் மூலம் அலஹாபாத் உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது ...

என்ன என்ன அடிப்படையில் ......

தொடரும்...

ஒரு சிறு அறிமுகம்

வழக்கு எண் 1 கோபால் சிங் வெர்சஸ் சஹூர் அஹமது
வழக்கு எண் 3 நிர்மோகி வெர்சஸ் பாபு ப்ரியா
வழக்கு எண் 4 வக்பு வாரியம் வெர்சஸ் கோபால் சிங்
வழக்கு எண் 5 பகவான் இராமர் வெர்சஸ் இராஜேந்தர் சிங்

பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட டைட்டில் சூட்டுகள் இவை ; பின்னர் உ.பி அரசின் வேண்டுகோளை ஏற்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது . சிறப்பு முழு பெஞ் விசாரித்து தீர்ப்பும் வந்து விட்டது .

பல நூற்றாண்டுகள் தொடர்புடைய சட்டம் , சமூகம் , மதம், வழிபாடு , இனம் என பல கோட்பாடுகள் ஒன்றுக்கொன்று நீக்கமற கலந்து இருக்கும் இந்த வழக்கில் இத்தனை சென்சிடிவ் நெஸ் இருப்பது இயல்பு .

வழக்கு 4 ம் என்ன என்ன யார் எனும் அளவில் ஒரு பட்டியல் தான் பார்த்திருக்கிறோம்

ஒவ்வொரு வழக்காக எடுத்துக் கொண்டு பார்க்கலாம்

என்னுடன் தேரில் ஏறி அலகாபாத் , அயோத்தி, டெல்லி எனவும் பூர்வகாலங்களுக்கும் பயணம் வரத் தயாரானவர்கள் எல்லாரும் .. தங்கள் வருகையினைப் பதிந்துவிட்டு ரெடியாகுங்க

(தமிழ் குழுமங்களிலோ அல்லது வலைப்பதிவுகளிலோ இந்த அளவுக்கு இதனை இத்தனை விபரமாக தமிழில் அலசி ஆராயவில்ல்லை எனும் அளவில் இதனை செய்துரனும் என ஆசை )