Saturday, October 2, 2010

ஒரு சிறு அறிமுகம்

வழக்கு எண் 1 கோபால் சிங் வெர்சஸ் சஹூர் அஹமது
வழக்கு எண் 3 நிர்மோகி வெர்சஸ் பாபு ப்ரியா
வழக்கு எண் 4 வக்பு வாரியம் வெர்சஸ் கோபால் சிங்
வழக்கு எண் 5 பகவான் இராமர் வெர்சஸ் இராஜேந்தர் சிங்

பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட டைட்டில் சூட்டுகள் இவை ; பின்னர் உ.பி அரசின் வேண்டுகோளை ஏற்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது . சிறப்பு முழு பெஞ் விசாரித்து தீர்ப்பும் வந்து விட்டது .

பல நூற்றாண்டுகள் தொடர்புடைய சட்டம் , சமூகம் , மதம், வழிபாடு , இனம் என பல கோட்பாடுகள் ஒன்றுக்கொன்று நீக்கமற கலந்து இருக்கும் இந்த வழக்கில் இத்தனை சென்சிடிவ் நெஸ் இருப்பது இயல்பு .

வழக்கு 4 ம் என்ன என்ன யார் எனும் அளவில் ஒரு பட்டியல் தான் பார்த்திருக்கிறோம்

ஒவ்வொரு வழக்காக எடுத்துக் கொண்டு பார்க்கலாம்

என்னுடன் தேரில் ஏறி அலகாபாத் , அயோத்தி, டெல்லி எனவும் பூர்வகாலங்களுக்கும் பயணம் வரத் தயாரானவர்கள் எல்லாரும் .. தங்கள் வருகையினைப் பதிந்துவிட்டு ரெடியாகுங்க

(தமிழ் குழுமங்களிலோ அல்லது வலைப்பதிவுகளிலோ இந்த அளவுக்கு இதனை இத்தனை விபரமாக தமிழில் அலசி ஆராயவில்ல்லை எனும் அளவில் இதனை செய்துரனும் என ஆசை )